சொந்த ஊர் செல்ல ஆவலாக ஆட்டோவில் வந்த நபர்; பேருந்து நிலையத்திலேயே உயிரிழப்பு

Published : Jun 12, 2023, 12:48 PM IST
சொந்த ஊர் செல்ல ஆவலாக ஆட்டோவில் வந்த நபர்; பேருந்து நிலையத்திலேயே உயிரிழப்பு

சுருக்கம்

சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த வாலிபர் ஆட்டோவிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள  பிரபல தனியார்  நகைக்கடையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொந்த ஊர் செல்வதற்காக மடிப்பாக்கத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். 

பேருந்து நிலையம் வந்ததும் ஆட்டோ ஓட்டுநர் அவினாசை இறங்க சொல்லியுள்ளார். ஆனால் அவினாஷ் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். தூங்குகிறார் என எண்ணிய ஆட்டோ ஓட்டுநர் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் எந்திரிக்கவில்லை. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து அவிநாசை சோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் கோடி கனிமவள கடத்தலில் எனக்கு தொடர்பா? திமுக எம்எல்ஏ சவால்

இதையடுத்து உடலை கைப்பற்றிய கோயம்பேடு காவல் துறையினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவினாசின் தந்தை மாறன் என்பவற்கு தகவல் தெரிவித்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அவினாஷ் அல்சர் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக பாதிப்புக்கு உள்ளாகி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி; விரக்தியில் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தந்தை தற்கொலை

இதனை அடுத்து அவினாஷ் உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற் கூறு ஆய்விற்கு பிறகு இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!