நடந்து சென்றாலும் முக கவசம் கட்டாயம்... இல்லையென்றால் ரூ.500 அபராதம்.. சென்னை போலீஸ் அதிரடி..!

By vinoth kumarFirst Published Apr 14, 2020, 12:56 PM IST
Highlights

முக கவசம் அணியாமல் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், அரசு சொல்வதை எதையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் சிலர் செல்கின்றனர். 

சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றாலும், வாகனங்களில் சென்றாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை மாநகராட்சி தரப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது, அதில், சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயமாகிறது. வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அரசு சொல்வதை எதையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் சிலர் செல்கின்றனர். 

இதனால் சென்னையில் முக கவசம் அணியாமல் நடந்து சென்றாலும், வாகனங்களில் சென்றாலும் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படும்.  தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் காவல் துறை அறிவித்து உள்ளது.  இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதேபோல் கோவையிலும் வீட்டைவிட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவோர் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

click me!