தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்து, மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் அமலாக்கத் துறைக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை அலுவலகம் வேப்பேரி இ.வி.கே சம்பத் சாலையில் அமைந்துள்ளது. மாநகர காவல் ஆணையாளராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சென்னை மாநகர் காவல் ஆணையரின் அலுவலகத்தின் 4 வாயில்களும் மூடப்பட்டு போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;- தமிழ்ல பேசுவியா? காதை திருகிய ஆசிரியையால் சிறுவனின் காது அறுந்தது..! இறுதியில் நடந்தது என்ன?
உயரதிகாரிகள் உள்ளிட்ட போலீசார்கள் கூட அடையாள அட்டையை காண்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் ஓசன் லைவ் ஸ்பேஸ் கட்டுமான நிறுவன அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க;- விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!
ஆனால், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மூடப்படவில்லை. வழக்கமான பாதுகாப்பு நடைமுறையே கடைபிடிக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்து, மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் அமலாக்கத் துறைக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.