அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

By Manikandan S R SFirst Published Apr 10, 2020, 9:36 AM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 525 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் கொரோனா குறித்த அச்சுறுத்தல் காரணமாகவும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் 8 பேர் பலியாகி இருக்கும் நிலையில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென காவல்துறை எச்சரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக தமிழகத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மூடப்பட்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 525 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் கொரோனா குறித்த அச்சுறுத்தல் காரணமாகவும் தமிழக அரசின் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தபிறகு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அது தொடர்பான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலை கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

click me!