இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு – அதிகாரிகளிடம் விசாரணை தொடர்கிறது

Published : Jun 22, 2019, 04:44 PM IST
இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு – அதிகாரிகளிடம்  விசாரணை தொடர்கிறது

சுருக்கம்

இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின் போது கொழும்புவில் உள்ள 3 தேவாலயங்கள்,  3 சொகுசு ஓட்டல்களில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினா. இதில், 258 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இலங்கை அரசு, பொது அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இந்த அவசர நிலையும், தாக்குலில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரமும் இன்றுடன் முடிகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வேளையில், கடந்த மே மாத இறுதியில், இலங்கையில் 99 சதவீதம் இயல்பு நிலை நிரும்பியதால் பாதுகாப்பான சூழல் உள்ளதாக கருதப்பட்டது. இதையடுத்து, இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ளும்படி ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா தூதரகங்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், நேரடியாக ஈடுபட்ட அனைவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். ஆனாலும், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முன்பே எச்சரிக்கை விடுத்தும், அலட்சிமாக செயல்பட்ட ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கு எதிராக கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இலங்கையில் மேலும் ஒரு மாதம், அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!