திருநங்கையை கொன்று கல்குவாரியில் உடல் வீச்சு… - நாடகமாடிய 8 பேர் கைது

Published : Jun 22, 2019, 03:03 PM ISTUpdated : Jun 22, 2019, 03:08 PM IST
திருநங்கையை கொன்று கல்குவாரியில் உடல் வீச்சு… - நாடகமாடிய 8 பேர் கைது

சுருக்கம்

மாங்காடு அருகே திருநங்கையை கொலை செய்து, கல்குவாரியில் வீசி, நாடகமாடிய 8 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

மாங்காடு அருகே திருநங்கையை கொலை செய்து, கல்குவாரியில் வீசி, நாடகமாடிய 8 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் திருநங்கைகள் சவுமியா (24) உள்பட 10க்கு மேற்பட்டோர் தங்கி இருந்தனர். கடந்த வாரம் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் சவுமிய குளிக்க சென்றார். அப்போது, அவர், நீரில் மூழ்கினார்.

இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் 2 நாட்கள் தேடி சடலத்த அழுகிய நிலையில் மீட்டனர். இதுதொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையில், காஞ்சிபுரம் அருகே குருவிமலை, திருநங்கைகள் நகரில் கடந்த 19ம் தேதி இரவு, மர்மநபர்கள் சிலர், அங்கிருந்த திருநங்கைகளை காரில் கடத்தி சென்றனர்.

புகாரின் பேரில் மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட திருநங்கைகள் சுதா (27), வசந்தி (24), ரெஜினா (26), வினோதினி (26), ஆர்த்தி (26) ஆகியோரை சிக்கராயபுரத்தில் மீட்டனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை குன்றத்தூர் கெளுத்திபேட்டையை சேர்ந்த மகாலட்சுமி (30), வடிவு (33), சூரியா (19), லத்திகா (19), அருணி (22), கார் டிரைவர்கள் ரமேஷ் (31), கார்த்திக் (26), செல்வம் (28), ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.

அதில், மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் திருநங்கைகள் ஒரு வீட்டில் தங்கி கடை, கடையாக சென்று பணம் வசூல் செய்வது மற்றும் கைத்தொழில் உள்ளிட்டவைகளை செய்து வந்தனர். இவர்களுக்கு தலைவியாக மகாலட்சுமி இருந்தார். திருநங்கைகள் வசூல் செய்யும் பணத்தில் ஒரு தொகையை மகாலட்சுமியிடம் தர வேண்டும். இந்த குழுவில் இருந்த சவுமியா, மகாலட்சுமிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, சவுமியாவை பற்றி சக திருநங்கைகளிடம் கூறி உள்ளார்.

இந்நிலையில் சிக்கராயபுரம் கல்குவாரியில் கடந்த 19ம் தேதி, திருநங்கைகள் குளிக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே நடந்த மோதலில் சவுமியா தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து உடலை கல்குவாரியில் வீசி விட்டு, அவர் குளிக்கும்போது தவறி விழுந்ததாக, சக திருநங்கைகள் நாடகமாடினர்.

அதேநேரத்தில், சவுமியாவின் கொலையை மறைக்க தனக்கு தினமும் ஒவ்வொரு திருநங்கையும் தலா ரூ.3 ஆயிரம் தர வேண்டும். இறந்த சவுமியா குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்  தர வேண்டும் என மகாலட்சுமி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருநங்கைகள் வசூல் செய்யும் பணத்தில் ரூ.3 ஆயிரத்தை தினமும் மகாலட்சுமியிடம், கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் மகாலட்சுமியின் தொல்லை அதிகமானதால், அங்கிருந்து தப்பித்து காஞ்சிபுரம் சென்று விட்டனர். போலீசில் சிக்கி கொள்வோமோ என பயந்த மகாலட்சுமி, கஞ்சிபுரத்தில் இருந்த திருநங்கைளை கடத்தினார். என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை