முதல்வரின் தாய்மாமன் திருப்பதி தேவஸ்தான தலைவர்…

Published : Jun 22, 2019, 02:46 PM ISTUpdated : Jun 22, 2019, 02:47 PM IST
முதல்வரின் தாய்மாமன் திருப்பதி தேவஸ்தான தலைவர்…

சுருக்கம்

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், தாய்மாமனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், தாய்மாமனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சுப்பா ரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இவர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய்மாமன் உறவுமுறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கான உத்தரவை, ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மன்மோகன் சிங், இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.  திருப்பதி தேவஸ்தான தலைவராக இன்று சுப்பா ரெட்டி பதவியேற்க உள்ளார். திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் பிற உறுப்பினர்களும், விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நியமன பதவியான திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்டதாகும். மிகவும் செல்வாக்கு மிக்க பொறுப்புகளில் ஒன்றாக ஆந்திராவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பு விளங்குகிறது.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!