மட்டன் பிரியாணிக்கு ரூ. 200... சிக்கன் பிரியாணிக்கு ரூ. 180... கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தாராளம்!

By Asianet TamilFirst Published Mar 21, 2019, 7:33 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பது பற்றிய விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 70 லட்சமும்  சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ. 28 லட்சமும் செலவு செய்யலாம் என்பது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு. வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட அளவில் செலவு செய்கிறார்களா என்பதை கண்காணிக்க தொகுதிக்கு இருவர் வீதம் செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் செலவுக்கான விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி மட்டன் பிரியாணி - ரூ. 200; சிக்கன் பிரியாணி - ரூ. 180; காலை உணவு - ரூ. 100; வெஜிடபுள் பிரியாணி - ரூ. 100; மதிய உணவு - ரூ. 100; குளிர்பானங்கள் - ரூ. 75; இளநீர் - ரூ. 40; தண்ணீர் 1லி - ரூ. 20; பொன்னாடை - ரூ. 150; பூ - ரூ. 60; புடவை - ரூ. 200; டீ சர்ட் - ரூ. 175; தொப்பி - ரூ. 50; பிளிச்சிங் பவுடர் - ரூ. 90; பூசணிக்காய் - ரூ. 120; வாழை மரம் - ரூ.700; தொழிலாளர் செலவு - ரூ.450; ஓட்டுனர்கள் - ரூ 695; பட்டாசு - ரூ. 600; மேளம் - ரூ. 4, 500; மண்டபம் - 2000 முதல் 6000 வரை; ஏசி அறைகள் - 9300 ரூ + வரி ( 5 stars ); ஏசி அறைகள் - 5800ரூ + வரி (3stars ) என தேர்தல் ஆணையம் விலையை நிர்ணயித்துள்ளது.


இந்த அளவிலேயே வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த ஒரு மாதத்துக்குள் தேர்தல் செலவு கணக்குகளை ஆணையத்திடம் வேட்பாளர்கள் வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட செலவை தாண்டி வேட்பாளர் செலவு செய்திருந்தால், தேர்தலை ரத்து செய்யவும் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

click me!