அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி...!

By vinoth kumarFirst Published Mar 20, 2019, 12:13 PM IST
Highlights

காஞ்சிபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது போது குழந்தையின் தலை துண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது போது குழந்தையின் தலை துண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து மகள் பொம்மி என்ற பெண்ணுக்கு இன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம்  கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்க அங்கு மருத்துவர் இல்லாததால், பணியில் இருந்த செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். 

கர்பிணிக்கு சுகப்பிரசவத்தின் போது குழந்தையை வெளியே எடுக்கும்போது தலை துண்டாகியது. குழந்தையின் உடல் பொம்மியின் வயிற்றுக்குள் சிக்கிக் கொண்டதால் பெரும் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனே பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்த குழந்தையின் உடல் பகுதியை பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு பொம்மியின் வயிற்றில் இருந்து போராடி மீட்கப்பட்டது. பிரசவத்தின் போது பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 30 கிராம மக்களுக்கு பயன்படும் ஆரம்ப சுகாதார மையத்தில் இரவு நேரத்தில் ஒரு மருத்துவர்கள் கூட இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

click me!