நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Mar 19, 2019, 1:35 PM IST
Highlights

சென்னை குடும்பநல நீதிமன்ற அறையில் நீதிபதி கலைவாணன் முன்பு மனைவி வரலட்சுமியை கணவர் சரவணன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவகாரத்து வழக்கில் ஆஜராக வந்த போது மனைவியை நீதிமன்றத்திற்குள் வைத்தே கணவன் கத்தியால் குத்தியுள்ளார். 

சென்னை குடும்பநல நீதிமன்ற அறையில் நீதிபதி கலைவாணன் முன்பு மனைவி வரலட்சுமியை கணவர் சரவணன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவகாரத்து வழக்கில் ஆஜராக வந்த போது மனைவியை நீதிமன்றத்திற்குள் வைத்தே கணவன் கத்தியால் குத்தியுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுவதுமே மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் சிவில் நீதிமன்றம் மற்றும் குடும்ப நீதிமன்றம் உள்ளிட்ட கிழமை நீதிமன்றங்கள் அனைத்துமே மாநில காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுவாகவே நீதிமன்றத்திற்கு வருபவர்கள் பழைய சட்டக்கல்லூரி வளாகம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாகவே பொதுமக்கள் வருவார்கள். அனைவருமே நீண்ட வரிசையில் நின்று படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் சோதனைக்கு பிறகே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

அப்படி இருந்த போதிலும் இன்று காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தொடர்பாக கணவன், மனைவி ஆகிய இருவருமே நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் தங்களுடைய விவகாரத்து தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். 

அப்போது குடும்ப நல நீதிமன்றத்தில் அறையின் வெளியே மனைவி வரலட்சுமி அமர்ந்திருந்தார். இந்த விவகாரத்தால் மிகவும் மனஉளைச்சலில் இருந்த சரணவன் மனைவியை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த வரலட்சுமியை கணவர் சரவணன் கத்தியால் குத்தியுள்ளார். இதனை அருகில் இருந்து பார்த்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஓடிச்சென்று வரலட்சுமியை காப்பாற்றினார். இதனையடுத்து சரவணணை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

தற்போது கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த வரலட்சுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!