இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… - 7.3 ரிக்டர் அளவில் பதிவு… கட்டிடங்கள் அதிர்ந்தன

By Asianet TamilFirst Published Jun 25, 2019, 9:56 AM IST
Highlights

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில், அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்து வருகின்றனர்.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில், அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக அந்நாட்டின் நேரப்படி காலை 11.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்து குலுங்கின. இதற்கிடையில், நிலநடுக்கம் குறித்த பாதிப்பு மற்றும் சேத விவரம் சரிவர வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கவில்லை. இதேபோல் இந்தோனேசியாவில் உள்ள சவும்லாக்கி பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் இன்று ஏற்பட்டது. 

click me!