சென்னை தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கடத்த முயன்றவரை ஊர்மக்கள் விரட்டிப் பிடித்து அடி உதை கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
திருவல்லிக்கேணியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையைக் கடத்த முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. குழந்தையைக் கடத்த முயன்ற நபரின் பெயர் புருஷோத்தமன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அப்போது அவர் குடிபோதையில் இருந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி ராயப்பேட்டை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் புருஷோத்தமன், வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் முன்கதவு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
undefined
வீட்டிற்குள் தன் பெற்றோருக்கு அருகில் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறது. தூக்கத்தில் குழந்தையை அப்படியே தூக்கிக்கொண்டு செல்ல முற்பட்டபோது குழந்தையின் பெற்றோர் விழித்துக்கொண்டுவிட்டனர். தூங்கும் நிலையில் குழந்தையை புருஷோத்தமன் தூக்கி வைத்துக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்துவிட்டனர்.
அவர்கள் பார்வையில் பட்டவுடன் புருஷோத்தமன் அங்கிருந்து ஓடத் தொடங்கிவிட்டார். அவரைத் துரத்திச் சென்றபடியே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். வேகமாக ஓடி வந்ததில் கால் தடுமாறி தெருவில் விழுந்த புருஷோத்தமனை அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்துக்கொண்டனர்.
Radha Vembu: யார் இந்த ராதா வேம்பு? ரூ.21,000 கோடி சொத்துடன் இந்தியாவின் பணக்காரப் பெண்!
ஊர்மக்களிடம் வசமாக அடி வாங்கிய புருஷோத்தமன் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்த மக்கள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் கைது செய்தனர்.
அவரைக் காவலில் எடுத்து விசாரித்ததில், புருஷோத்தமன் தினக்கூலித் தொழிலாளி என்பதும், பெரும்பாலான நாட்கள் குடிபோதையில் தெருவில் விழுந்து கிடைப்பவர் என்றும் தெரியவந்தது.
படுகாயம் அடைந்திருந்த புருஷோத்தமன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் குழந்தையைக் கடத்த முயன்றாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Juhu murder: தாயைக் கொன்று பள்ளத்தாக்கில் வீசிய மகன்! அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!