சென்னை சாலையோர உணவகங்களில் பூனைக்கறி பிரியாணி? உணவு பிரியர்கள் ஷாக்

By Velmurugan s  |  First Published Feb 25, 2023, 7:26 PM IST

சென்னையில் சாலையோர அசைவ உணவகங்கள் சிலவற்றில் ஆட்டுக் கறியுடன் பூனை கறியும் கலக்கப்பட்டு உணவு விற்கப்படுவதாக கிடைத்துள்ள தகவலால் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவகங்களும் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் தரம், பயன்படுத்தும் பொருட்கள் குறித்து பெரும்பாலும் யாரும் ஆய்வு செய்வது கிடையாது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் உணவக உரிமையாளர்கள் அதிக லாபத்திற்காக பல்வேறு வழிகளை கையாளுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

Tap to resize

Latest Videos

அதன் ஒரு பகுதியாக சாலையோர உணவகங்கள் சிலவற்றில் ஆட்டுக் கறியில் பூனை கறி கலந்து பிரியாணி விற்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினரின் உதவியுடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் பாரிமுனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நரிகுறவர் மக்கள் வாழும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

undefined

இந்த ஆய்வில் சந்தேகத்திற்கு இடமாக 11 பூனைகள் கூண்டில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான வகையில் வைக்கப்பட்டிருந்த பூனைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை வனவிலங்கு ஆர்வலர்களிடம் ஒப்படைத்தனர்.

நேர்மையான அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு; விண்ணப்பிக்க இன்றே கடைசி: நூதன போஸ்டரால் சலசலப்பு

இது தொடர்பாக வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், இரவு நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் அருகில் சுற்றித்திரியும் பூனைகள் பிடிக்கப்பட்டு பார்ப்பதற்கு அழகாக உள்ள பூனைகள் வசதி படைத்தவர்களிடம் விற்கப்படுவதாகவும், பார்ப்பதற்கு சாதாரணமாக உள்ள பூனைகள் இறைச்சி கடை நடத்துபவர்களிடம் விற்கப்பட்டு பின்னர் அவை ஆட்டு கறியுடன் கலக்கப்பட்டு சாலையோரம் உள்ள உணவகங்ளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது

ஆட்டுக் கறியுடன் பூனை கறி கலந்து உணவகங்களில் பிரியாணி விற்கப்படுவதாக வெளியான தகவலால் உணவு பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

click me!