தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பூந்தமல்லி:
மணலி சரவணா நகர், சக்தி நகர், பாஷ்யம் அடுக்குமாடி, அம்மன் நகர், மீரா நகர், பஜனை கோவில் தெரு, ருக்மணி நகர், முத்துக்குமரன் நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம்.
அம்பத்தூர்:
அன்னை நகர் கண்டிகை, பெருமாள் கோவில் தெரு, மேட்டு காவியா நகர், லேக் வியூ கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.