
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கிண்டி பகுதி:
ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுண்ட், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, வாணுவம்பேட்டை, டி.ஜி.நகர், ஆதம்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், புழுதிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்திற்கும் பகுதிகளும் அடங்கும்.
போரூர் பகுதி:
திருமழிசை, அன்னைகாட்டுச்சேரி, வயலாநல்லூர், சிடுகாடு, பூந்தமல்லி மங்காடு பெரியார் நகர், பவித்திரா நகர், சிப்பாய் நகர், முருகப்பிள்ளை நகர், ஜெ.ஜெ.நகர், ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி, லீலாவதி நகர், திருமுடிவாக்கம், திருநீர்மலை மெயின் ரோடு, போலீஸ் குடியிருப்பு, ஷர்மா நகர், மங்களாபுரி நகர், திருமுடிவாக்கம் சிட்கோ, டவர்லைன் சாலை, கலைஞர் தெரு, நல்லூர் கிராமம், எம்.ஜி,ஆர்.நகர், எஸ்ஆர்எம்சி தெள்ளியார் அகரம், தனலட்சுமி நகர் ஒரு பகுதி, முத்தமிழ் நகர், காவனூர் சேக்கிழார் நகர், துரைசாமி சாலை, தேவி கருமாரியம்மன் நகர், கோவூர் குன்றத்தூர் ஒரு பகுதி, அம்பாள் நகர், சத்தியா நகர், ஐயப்பன்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி ரோடு, சுவாமிநாதன் நகர், கன்னிகாபுரம், டி.ஆர்.ஆர். நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
அம்பத்தூர் பகுதி:
அண்ணாநகர், டிவிஎஸ் நகர், பள்ள தெரு, பார்த்தசாரதி தெரு.
கே.கே. நகர் பகுதி:
அசோக் நகர் முழுவதும், ம்ஜிஆர் நகர் முழுவதும், ஈக்காட்டுதாங்கல், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, நெசப்பாக்கம், வடபழனியின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.