கொரோனா பாதிப்பில் ஒரே நாளில் 2ம் இடத்தை பிடித்த கடலூர்! விழுப்புரத்திலும் உக்கிரம்! மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published May 4, 2020, 8:04 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று சென்னையை தவிர 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3550ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் அதிகமான பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்டது என்றாலும், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் பல பேருக்கு கொரோனா இருப்பதுதான் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமானதற்கு காரணம்.

இன்று சென்னையில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதால், அங்கு பாதிப்பு அதிகமானதில் ஆச்சரியமில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த பாதிப்பு, 2 நாட்களாக வெகுவாக அதிகரித்திருக்கிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் இன்று அதிகபட்சமாக கடலூரில் 122 பேருக்கும் விழுப்புரத்தில் 49 பேருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக பெரம்பலூரில் 25 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வடமாவட்டங்களில் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இப்போது மற்ற மாவட்டங்களிலும் பரவலாக எண்ணிக்கை உயருவது, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் அதிகபட்சமாக 1724 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டாமிடத்தில் இருந்த கோவையை பின்னுக்குத்தள்ளி கடலூர் மாவட்டம் இரண்டாமிடம் பிடித்துள்ளது. கடலூரில் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் 135 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 34

செங்கல்பட்டு - 97

சென்னை - 1724

கோவை - 146

கடலூர் - 161

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 91

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 15

காஞ்சிபுரம் - 41

கன்னியாகுமரி - 17

கரூர் - 44

மதுரை - 91

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 59

நீலகிரி - 9

பெரம்பலூர் - 36

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 21

ராணிப்பேட்டை - 43

சேலம் - 33

சிவகங்கை - 12

தென்காசி - 49

தஞ்சாவூர் - 58

தேனி - 44

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 19

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 79

திருவண்ணாமலை - 27

திருவாரூர் - 31

திருச்சி - 55

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 135

விருதுநகர் - 34..
 

click me!