சென்னை கலெக்டர் ஆபிஸ்க்குள் நுழைந்த கொரோனா... 28 வயது பெண் பாதிப்பால் அதிர்ச்சி...!

By vinoth kumarFirst Published May 4, 2020, 6:56 PM IST
Highlights

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை சென்னையில் 1,724 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஆக இருந்து வந்த நிலையில் தற்போது 200ஆக உயர்ந்துள்ளது.

இதில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

click me!