சென்னையை புரட்டி எடுக்கும் கொரோனா.. கெத்து காட்டும் கிருஷ்ணகிரி.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

By karthikeyan VFirst Published Apr 29, 2020, 9:39 PM IST
Highlights

சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவரும் நிலையில், இன்று 94 பேருக்கு சென்னையில் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 768ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து 12ம் தேதி வரை பாதிப்பு கடுமையாக இருந்தது. குறைந்த பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும் அந்த சமயத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. 

ஆனால் ஏப்ரல் 13ம் தேதியிலிருந்து பரிசோதனை அதிகப்படுத்தப்பட்ட போதிலும் பாதிப்பு கட்டுக்குள் தான் இருந்தது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 7000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவரும் நிலையில், பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு 100ஐ கடந்துள்ளது. 

குறிப்பாக சென்னையில் தான் பாதிப்பு கடுமையாக உள்ளது. தமிழ்நாட்டு மொத்த பாதிப்பில் 80-90% சென்னையில் தான் பதிவாகிறது. நேற்று கொரோனா உறுதியான 121 பேரில் 103 பேர் சென்னை. இன்று கொரோனா உறுதியான 104 பேரில் 90 பேர் சென்னை. 

சென்னையில் பயண பின்னணியோ, கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கோ கூட கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது சமூக தொற்று தொடங்கிவிட்டதை பறைசாற்றுகிறது. 

இன்று 94 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 768ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தான் இன்னும் கொரோனாவிற்கு ஏய்ப்பு காட்டிக்கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பே இல்லாத பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் திகழ்கிறது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 73

சென்னை - 768

கோவை - 141

கடலூர் - 26

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 6

காஞ்சிபுரம் - 23

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

மதுரை - 79

நாகப்பட்டினம் - 44

நாமக்கல் - 59

நீலகிரி - 9

பெரம்பலூர் - 7

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 15

ராணிப்பேட்டை - 39

சேலம் - 31

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சாவூர் - 55

தேனி - 43

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 54

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 50

விருதுநகர் - 32.
 

click me!