கொரோனா அண்டாத இரண்டே மாவட்டங்கள்.. சென்னையில் உச்சம்.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

By karthikeyan VFirst Published Apr 22, 2020, 8:21 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று 33 பேருக்கு  கொரோனா உறுதியாகியிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 1629ஆக அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்தாலும், கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை vs பாதிப்பு எண்ணிக்கை விகிதத்தை பார்த்தால் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதை அறிய முடியும். ஏனெனில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 6000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாகத்தான் உள்ளது. 

நேற்று 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெறும் 33 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த 33 பேரில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 373ஆக அதிகரித்துள்ளது. சென்னையிலும் கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் தான் பாதிப்பு அதிகமாகவுள்ளது. 

கொரோனா பாதிப்பே இல்லாத மாவட்டங்களில் ஒன்றாக இருந்த புதுக்கோட்டையில் நேற்று முன் தினம் ஒருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களாக உள்ளன. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 56

சென்னை - 373

கோவை - 134

கடலூர் - 26

தர்மபுரி - 0

திண்டுக்கல் - 77

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 5

காஞ்சிபுரம் - 11

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 50

நாகப்பட்டினம் - 44

நாமக்கல் - 51

நீலகிரி - 9

பெரம்பலூர் - 5

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 11

ராணிப்பேட்டை - 39

சேலம் - 24

சிவகங்கை - 12

தென்காசி - 31

தஞ்சாவூர் - 54

தேனி - 43

திருநெல்வேலி - 62

திருப்பத்தூர் - 17

திருப்பூர் - 109

திருவள்ளூர் - 50

திருவண்ணாமலை - 13

திருவாரூர் - 28

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 41

விருதுநகர் - 19.

click me!