கொரோனாவை அடக்கிய தமிழ்நாடு.. இன்று வெறும் 33 பேருக்கு மட்டுமே கொரோனா.. 27 பேர் டிஸ்சார்ஜ்

By karthikeyan VFirst Published Apr 22, 2020, 6:34 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை 1596லிருந்து 1629ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 4 நாட்களாக 6000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நேற்று முன் தினம் 6193 டெஸ்ட் செய்யப்பட்டதில் வெறும் 43 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. 

நேற்று 6060 டெஸ்ட் செய்யப்பட்டதில் 76 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று ஒரே நாளில் 5978 டெஸ்ட் செய்யப்பட்டதில் வெறும் 33 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

நேற்று 76 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்றைக்கு வெறும் 33 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இன்றைக்கு 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிப்பு எண்ணிக்கை 1596லிருந்து 1629ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 6000 டெஸ்ட்டுகள் செய்யப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை 662ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை மொத்தம் 59023 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 23,760 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 155 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, 87,159 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

click me!