தினமலர் முன்னாள் ஆசிரியரும், நாணயவியலின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!

By vinoth kumarFirst Published Mar 4, 2021, 11:48 AM IST
Highlights

ஒரே நேரத்தில் பல துறைகளில், ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி கண்ட, தினமலர் நாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

ஒரே நேரத்தில் பல துறைகளில், ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி கண்ட, தினமலர் நாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

தமிழகத்தில் பிரபல தினமலர் நாளிதழ் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி. நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை முதன் முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தமிழகத்தின் நாணயவியல் தந்தை என போற்றப்படுபவர். 

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.  

ஒரே நேரத்தில் பல துறைகளில், ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி கண்ட, தினமலர் நாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி டி.வி.ராமசுப்பையரின் 2வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!