ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த SI-க்கு அதிர்ச்சி கொடுத்த DGP சைலேந்திர பாபு.. அப்படி என்ன செய்தார்

Published : Apr 06, 2022, 11:17 AM IST
ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த SI-க்கு அதிர்ச்சி கொடுத்த DGP சைலேந்திர பாபு.. அப்படி என்ன செய்தார்

சுருக்கம்

கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வாகன சோதனை

கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

போலீஸ் மீது மோதிய ஆட்டோ

அப்போது, அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிகவேகமாக வந்த ஆட்டோ ஒன்றை ஓரமாக நிறுத்துமாறு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சைகை காட்டினார். ஆனால், வேகத்தை குறைக்காமல் வந்த ஆட்டோ காவல் உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த பொன்ராஜ் தனியார் மருத்துவமனை 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினார். 

டிஜிபி சைலேந்திர பாபு 

இந்நிலையில், ஆட்டோ மோதி படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு  தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் காவல்துறை செய்து தரும் என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!