சென்னை மந்தைவெளி நாராயண செட்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (52). இவர் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹேம்நாத் (15). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சிறுவன் ஹேம்நாத் குளிப்பதற்காக வீட்டின் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார்.
சென்னையில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய 9ம் வகுப்பு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்டர் ஹீட்டர்
சென்னை மந்தைவெளி நாராயண செட்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (52). இவர் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹேம்நாத் (15). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சிறுவன் ஹேம்நாத் குளிப்பதற்காக வீட்டின் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார்.
undefined
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன்
பின்னர், சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக மின்சார இணைப்பை துண்டிக்காமல் அதற்குள் ஹேம்நாத் கைவிரலை விட்ட நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வந்து பார்த்த போது ஹேம்நாத் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார். உடனே சிறுவனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
பலி
அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். இதனையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- அய்யோ கடவுளே.. வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி தம்பதி துடிதுடித்து உயிரிழப்பு... கதறும் குழந்தைகள்..!