முதல்வர் எழுதிய கடிதம்.. உடனே டெல்லி பறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்.!

By vinoth kumar  |  First Published Mar 14, 2024, 8:32 AM IST

பொன்முடியின் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் குற்றவாளி என பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் நிறுத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. 


பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்குமாறும் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டார்.  

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜெயசந்திரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி பறிபோனது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: அதிமுக-வை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்களே? இதுதான் மெகா கூட்டணியா இபிஎஸ்.. கே.சி. பழனிசாமி விளாசல்!

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டது. அதில், பொன்முடியின் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் குற்றவாளி என பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் நிறுத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. 

குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டதால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிக்கப்பட்டது வாபஸ் பெறுவதாகவும் பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வதாக  தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இதனையடுத்து பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.  

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டார். பொன்முடி மீண்டும் அமைச்சரானால் அதற்கான உத்தரவில் ஆளுநர் கையெழுத்திடுவதோடு பதவிப்பிரமாணமும் செய்து வைக்க வேண்டும். இதைப் போன்ற நிலை இருப்பதால், இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறை அமைச்சக  அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசனை செய்யவதற்காக இன்று இன்று காலை 7 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். 

ஆளுனருடன் அவருடைய செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உடன் செல்கின்றனர். 3 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் வரும் 16ம் தேதி பகல் 12:40 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்புகிறார். அமைச்சராக பொன்முடி பதவியேற்க இருந்த நிலையில் ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  தேமுதிகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்குது.. பாமகவுடன் கூட்டணியா.? இல்லையா.? உண்மையை போட்டுடைத்த எடப்பாடி

இன்னும் இரண்டு தினங்களில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தில் அதிகாரம் சென்று விடும். இதனால் அமைச்சராக பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கல், தேர்தல் முடிவடைந்த பிறகே அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு ஏற்படும். எனவே இன்னும் இரண்டு மாதங்கள் பொன்முடி காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே ஆளுநர் தனது பயணத்தை நீடித்துள்ளார் என கூறப்படுகிறது. 

click me!