போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக இந்த வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜாஃபர் சாதிக்கை காணவில்லை என ஆன்லைன் வாயிலாக அவரது வழக்கறிஞர் பிரபாகரன் தமிழ்நாடு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட 4வது சந்தேக நபரான சாந்தோம் பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான் என்ற பெசோஸ், 35, என்பவரின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன், தனது கட்சிக்காரரை காணவில்லை அவரைக் கண்டுபிடித்து தரும்படி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் கூட்டாளி சதாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளது.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?