குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதில் கவனம் செலுத்தும் வகையில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்
சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்சரா ரெட்டியால் தொடங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சி, குழந்தை உரிமைகளுக்கான பிரச்சாரம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த விருது விழாவில், நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு
மனநலப் பிரச்சினைகள், ஆட்டிசம் மற்றும் டிஸ்லெக்ஸியா பாதிப்புக்குள்ளான சிறப்பு குழந்தைகளுக்கான சேவைக்காக டோரை அறக்கட்டளையின் சுமித்ரா பிரசாத்திற்கு விருது வழங்கப்பட்டது. இது போல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய நடிகை ராதிகா சரத்குமார் பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தை மற்றும் உடல்மொழியில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அப்சரா ரெட்டி, “குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக வேலைகளைச் செய்து வரும், ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை கௌரவிக்க இந்த தளத்தை உருவாக்கியுள்ளோம் என்றும், குழ்ந்தைகளுக்காக தொடர்ந்து பேசுவதன் மூலம் பெற்றோரின் விழிப்புணர்வை அதிகரிப்பது தங்கள் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
போலீஸ்னா தொப்பி இருக்கலாம், தொப்பை இருக்கக் கூடாது; சினிமா வசனம் பேசி தமிழிசை கண்டிப்பு