மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
மறைந்த திமுகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமானக் கோளாறு காரணமாக கடந்த சில வருடங்களாக அவஸ்தை பட்டு வந்தார்.
திட உணவுகள் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் திரவ வகை உணவுகளையே அவர் உட்கொண்டு வந்தார். காய்கறி சூப், பழச்சாறுகள், பால், போன்ற ஆகாரங்களை மட்டும் உட்கொண்டு வந்த ராஜாத்தி அம்மாளுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
அவருக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனையான Bonn மருத்துவமனைக்கு ராஜாத்தி அம்மாளை அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க முடிவு செய்தார் கனிமொழி. அதன்படி ராஜாத்தி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சமீபத்தில் உயிரிழந்த நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் ராஜாத்தி அம்மாள். இந்த நிலையில் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.