தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

By manimegalai aFirst Published Oct 3, 2021, 1:40 PM IST
Highlights

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்ப்ட்டன. கூட்டத்தை பொறுத்தும் இந்த ஆண்டும் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்ப்ட்டன. கூட்டத்தை பொறுத்தும் இந்த ஆண்டும் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ஆம் தேதி வருகிறது. தீபாவளி பண்டிகை வியழக்கிழமை வருவதால், அடுத்துள்ள வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே தீபாவளியை கொண்டாட சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு அறிவிப்புக்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில், அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தேதி தற்போது வெளியகி இருக்கிறது. அதன்படி தீபாவளி பண்டிக்கைக்கான பேருந்து முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு பேருந்துகளும், படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன் பேருந்துகளும் இயக்கபப்ட உள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு பேருந்துகளை இம்மாதம் 29-ஆம் தேதியில் இருந்து இயக்கவும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது.

click me!