முழுமையாக கரையை கடந்த மாண்டஸ் புயல்.. மழை தொடருமா? வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்.!

By vinoth kumarFirst Published Dec 10, 2022, 6:43 AM IST
Highlights

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும்.

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும்.

இதையும் படிங்க;- மாண்டஸ் புயல் எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!

இரவு 9.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய மாண்டஸ் புயல் அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடக்கும் நிகழ்வு நடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக பாலசந்திரன் தெரிவித்தார். 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ. மழை, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, நுங்கம்பாக்கம் 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- புயல் சூழலை சமாளிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது… முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!

click me!