தீவிரமடைந்த மாண்டஸ் புயல்... சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து!!

By Narendran SFirst Published Dec 9, 2022, 6:59 PM IST
Highlights

மாண்டஸ் புயல் சென்னை நெருகி வரும் நிலையில் சென்னையில் 13 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் சென்னை நெருகி வரும் நிலையில் சென்னையில் 13 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் படத்தை எடுத்துஅனுப்பிய EOS-06 செயற்கைக்கோள்

குறிப்பாக சென்னை கடற்கரையை புயல் நெருங்கி வருவதால், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ. தென்கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து 170 கி.மீ. தெற்கு, தென்கிழக்கு திசையிலும் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை.! மொட்டை மாடிக்கு செல்ல கூடாது! திறந்த வெளியில் செல்பி எடுக்க கூடாது- தமிழக அரசு எச்சரிக்கை

மாண்டஸ் புயல் நெருங்கி வருவதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாண்டஸ் புயல் காரணமாக விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 13 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி, பெங்களூர், விஜயவாடா, மைசூர், திருச்சி, கோவை, மங்களூர் ஆகிய நகரங்களுக்கான 13 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!