உள்ளாடைக்குள் ஒளித்து வைத்து கடத்திய ரூ.1.59 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

By SG BalanFirst Published Jan 19, 2023, 11:48 AM IST
Highlights

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.59 கோடி மதிப்புடைய 3.14 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, நான்கு பெண்கள் உட்பட ஏழு பேரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.59 கோடி மதிப்புடைய 3.14 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, நான்கு பெண்கள் உட்பட ஏழு பேரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த இருவர் கொண்டு வந்த, கம்ப்யூட்டர், யுபிஎஸ் ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த 900 கிராம் எடை கொண்ட தங்கத் தகடுகள் சிக்கின. அவற்றைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் இருவரையும் பேரையும் கைது செய்தனர்.

தமிழர்களை சீண்டி பார்த்தால் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஆளுநரை மறைமுக தாக்கி பேசிய கனிமொழி..!

இதேபோல சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விமானத்தில் வந்த இரண்டு பெண்களிடம் 766 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தைச் சோதனையிட்டபோது, கடலூரைச் சேர்ந்த ஒருவர் தன் உள்ளாடைக்குள் பதுக்கி எடுத்துவந்த 645 கிராம் தங்கப் பசை சிக்கியது. அவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் இரண்டு பெண்கள் தங்கள் உள்ளாடைக்குள் 837 கிராம் தங்கப் பசையை ஒளித்து வைத்து எடுத்துவந்ததைக் கண்டுபிடித்தனர். அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்துகளை விற்றால் ஆப்பு தான்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

இவ்வாறு திங்கட்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு வந்த நான்கு விமானங்களில் ரூ.1.59 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றின் எடை மொத்தம் 3.14 கிலோ. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

click me!