கொரோனா சிறப்பு மையங்கள் தயார்.. எங்களுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் ஊரடங்கு கன்பர்ம்.. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

By vinoth kumarFirst Published Apr 10, 2021, 1:33 PM IST
Highlights

அனைத்து மாவட்டங்களில் தயார் நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

அனைத்து மாவட்டங்களில் தயார் நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூடுதல் செவிலியர்களை பணியமர்த்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 சதவீதம் தான். மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலின் சங்கிலித் தொடரை முறியடிக்கலாம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 11,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த போக்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் ஒத்தழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். சென்னையில் உள்ள விக்டோரியா மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூரில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார். 

click me!