அச்சம் தரும் வகையில் பாதிப்பு.. தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 5, 2021, 11:21 AM IST
Highlights

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- வாக்களர்கள் நாளை மாஸ்க் அணிந்துதான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். தள்ளிப்போடாமல் காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார். 

மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஏப்ரல் 7ம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரை செய்யப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

7ம் தேதிக்கு பிறகு கொரோனா பரவாமல் தடுக்க வீடு, வீடாக  காய்ச்சல் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படும். 54 லட்சம் கொரோனா தடுப்பூசி  நம்மிடம் இருந்தாலும்  தினமும் 15 ஆயிரம் பேர்தான் தடுப்பூசி போடுகின்றனர். தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என்ற தகவலை நம்பவேண்டாம் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

click me!