பட்டப்பகலில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் பயங்கரம்... இளம்பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

Published : Oct 10, 2019, 03:09 PM IST
பட்டப்பகலில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் பயங்கரம்... இளம்பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

சுருக்கம்

நாளை சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் பிரதான பகுதியான சிந்தாதிரிப்பேட்டையில் ரிச்சி தெரு உள்ளது. இங்கு மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யப்படும் இடம் என்பதால் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றி வளைத்து தாக்கினர். அப்போது, ஒருவர் அந்த பெண்ணை அரிவாளால் வெட்டியதுடன் நாட்டு வெடிகுண்டையும் வீசினர். 

இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ரவுடி சேகரின் 3-வது மனைவி என்பதும், அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?