ஒரே நாளில் ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்த மாநகராட்சி ஆணையர்.. குவியும் பாராட்டு..!

By vinoth kumarFirst Published May 14, 2021, 6:01 PM IST
Highlights

சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு இனி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு இனி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில் மாநிலத்திலேயே அதிகபட்ச பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனால், நோய் தொற்று உள்ளவர்களை மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருந்தது. 

மேலும், ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இரண்டு நாளில் 250 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்துள்ளார். அதாவது சாதாரண கார்களில் ஆம்புலன்ஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஆம்புலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு பெரிய அளவில் குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. 

click me!