ஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்படுமா..? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

Published : Apr 09, 2020, 06:02 PM ISTUpdated : Apr 09, 2020, 06:03 PM IST
ஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்படுமா..? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

சுருக்கம்

கடந்த 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி ஊரடங்கு முடிவதால், அதன்பின் எப்படி ரயில்கள் இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகின.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்திகள் வெறும் வதந்தி என ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

கொரோனா வைரஸைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலையிழந்து வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி ஊரடங்கு முடிவதால், அதன்பின் எப்படி ரயில்கள் இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகின.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், ஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே துறை சார்பில் எந்த விதமான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அவ்வாறு இயக்க ரயில்வே தயாராகி வருகிறது என்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறப்பானது. அனைத்துத் தரப்பினருடன் கலந்தாய்வு செய்து, ஆலோசித்து, பயணிகளின் நலனுக்கு ஏற்றார்போல் நல்ல முடிவை, பயணிகள் ரயில் இயக்குவது குறித்து சரியான நேரத்தில் ரயில்வே அறிவிக்கும். சில ஊடகங்களில் வரும் செய்திகள், சமூக ஊடங்களில் வரும் ஆதாரமில்லாத செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!