கொரோனாவில் தலைநகர் சென்னை முதலிடம்... எந்த பகுதியில் எத்தனை பேருக்கு பாதிப்பு...? லிஸ்ட் போட்ட மாநகராட்சி..!

By vinoth kumarFirst Published Apr 9, 2020, 1:05 PM IST
Highlights

சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை 15 மண்டலம் வாரியாக மாநகராட்சி முழு பட்டியலை வெளியிட்டுள்ளது.
 

சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை 15 மண்டலம் வாரியாக மாநகராட்சி முழு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 1135 பேருடன் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தமிழகமும், 3வது இடத்தில் டெல்லியும் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது. 

 சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதில்,  ராயபுரத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர்- 22, அண்ணாநகர்- 19, கோடம்பாக்கம்- 18, தண்டையார்பேட்டை-13, தேனாம்பேட்டை-11, பெருங்குடியில்- 5, வளசரவாக்கம், திருவொற்றியூர், அடையாறில் தலா 4 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், ஆலந்துர், சோழிங்கநல்லூரில் தலா 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மணலி, அம்பத்தூரில் பகுதியில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

click me!