
கொரோனா நிலவரம் குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 866 மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 34 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 5 பேரும் அடக்கம். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 19 ஆயிரத்து 272 பேர் ஆண்கள், 15 ஆயிரத்து 013 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 32 ஆயிரத்து 479 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்து 979 ஆகவும் அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 468 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 290 பேரும், தனியார் மருத்துவமனையில் 178 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 66 லட்சத்து 41 ஆயிரத்து 632 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 28 ஆயிரத்து 745 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 15 லட்சத்து 83 ஆயிரத்து 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.