ஒரே நாளில் ஒரு கோடி வசூல்... மக்களின் அலட்சியத்திற்கு தமிழக அரசு கொடுத்த தக்க பதிலடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 12, 2021, 06:24 PM IST
ஒரே நாளில் ஒரு கோடி வசூல்... மக்களின் அலட்சியத்திற்கு தமிழக அரசு கொடுத்த தக்க பதிலடி...!

சுருக்கம்

நேற்று ஒரே நாளில் மட்டுமே தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடி அபராதமாக வசூலிகப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்தை கடந்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.200ம், பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், எச்சில் துப்பினாலும் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 

இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படி தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

நேற்று ஒரே நாளில் மட்டுமே தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடி அபராதமாக வசூலிகப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்த பிற நகரங்களில் மட்டும் நேற்று ரூ.89 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் 8 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாததால் இதுவரை 1.30 லட்சம் வழக்குகளும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் 6,465 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

புல் போதையில் வீட்டிற்கு வந்த கணவர்.. தனி அறையில் தூங்கிய மனைவியை விடாத சத்யராஜ்.. திடீரென அலறல்.. நடந்தது என்ன?
சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?