சென்னையில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று... இந்த 6 மண்டலங்களில் மட்டும் இத்தனை தெருக்கள் அடைப்பா?

By Kanimozhi PannerselvamFirst Published Apr 12, 2021, 5:27 PM IST
Highlights

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்துள்ளது 

தமிழகத்தை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் தலைநகரான சென்னையிலும் தன்னுடைய கோரமுகத்தை தொடர்ந்து காட்டி வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதலே சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சியும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெரு முற்றிலும் அடைக்கபட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஒரே வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பலருக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதியாவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 819 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படு வரும் நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த 146 தெருக்கள் அடைக்கபட்டுள்ளன. குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் தெருக்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரில் 1,753 பேருக்கும், ராயபுரத்தில் 1,444 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்து திருவிக நகரில் 1,290 பேரும், அம்பத்தூரில் 1,179 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

click me!