தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் திடீரென அதிகரித்த கொரோனா.. பீதியில் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Mar 25, 2023, 10:48 AM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை தினமும் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை தினமும் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.  மற்றொரு புறம் தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் (H3N2) காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது. இதையடுத்து காய்ச்சல் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழகம், குஜராத், கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க;- பெற்றோர் சதியால் ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த காதலன்! பார்க்க விடாமல் தடுத்ததால் 15 வயது சிறுமி விபரீத முடிவு

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 549 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 56 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க;-  நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா..! அலெர்ட் செய்யும் மத்திய அரசு

மேலும், தொடர் காய்ச்சல் இருந்து வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

click me!