#BREAKING சென்னையில் அதிர்ச்சி.. சரவணா ஸ்டோரில் மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா..!

Published : Apr 19, 2021, 01:04 PM IST
#BREAKING சென்னையில் அதிர்ச்சி.. சரவணா ஸ்டோரில் மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா..!

சுருக்கம்

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகமான சரவணா ஸ்டோரில் ஏற்கனவே 13 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 26 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகமான சரவணா ஸ்டோரில் ஏற்கனவே 13 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 26 பேருக்கு தொற்று  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. 

இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது. அதேநேரத்தில், உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. 

இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரில் பணிபுரியும் 165 பேருக்கு கடந்த வார இறுதியில் மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 13 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 26 பேருக்கு இன்று நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தண்டையார்பேட்டையிலுள்ள காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

PREV
click me!

Recommended Stories

புல் போதையில் வீட்டிற்கு வந்த கணவர்.. தனி அறையில் தூங்கிய மனைவியை விடாத சத்யராஜ்.. திடீரென அலறல்.. நடந்தது என்ன?
சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?