கொரோனா தடுப்பில் சரியான பாதையில் தமிழ்நாடு..! உச்சபட்ச பரிசோதனை; குறைந்த பாதிப்பு.. கட்டுக்குள் வந்த கொரோனா

Published : Aug 06, 2020, 07:23 PM IST
கொரோனா தடுப்பில் சரியான பாதையில் தமிழ்நாடு..! உச்சபட்ச பரிசோதனை; குறைந்த பாதிப்பு.. கட்டுக்குள் வந்த கொரோனா

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,79,144ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,79,144ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமே, தொற்றுள்ளவர்களை அதிகமாக கண்டறிந்து விரைவில் கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 67,153 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், பாதிப்பு எண்ணிக்கை பெரியளவில் உயரவில்லை. இன்று 5684 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,79,144ஆக அதிகரித்துள்ளது. 

இன்று சென்னையில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,06,096ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களில் தாறுமாறாக அதிகரித்துவந்தது. ஆனால் கடந்த ஒருசில தினங்களாக மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கிறது. 

அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் அதேவேளையில், பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் குணமடைவது ஆறுதல் அளிக்கும் விஷயம். இன்று 6272 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,21,087ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 110 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 4571ஆக அதிகரித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?