சென்னையில் சரசரவென குறையும் கொரோனா தொற்று.. சிகிச்சையில் 11,800 பேர் மட்டுமே..!!

By Asianet TamilFirst Published Aug 5, 2020, 10:01 PM IST
Highlights

சென்னையில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துவருகிறது. தற்போது 11,800 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துவருகிறார்கள். 

சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. தமிழகத்தில் இன்று 5175 பேர் கொரோனாவல் பாதிக்கபப்ட்டனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 1044 ஆக இன்று பதிவானது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 1,05,004ஆக உயர்ந்து உள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் மொத்தம் 37,537 தெருக்கள் உள்ளன. இதில் முன்பு 9,509 தெருக்களில் கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே அந்த தெரு தடை செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஒரு தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

 

 

அந்த வகையில் கடந்த வாரங்களுக்கு முன்பு 813 தெருக்கள் தடை செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை குறைந்து வெறும் 24 தெருக்கள் மட்டுமே தடை செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. சென்னையில் 1.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11,800 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது.
 

click me!