அதிகமான பரிசோதனை; குறைவான பாதிப்பு..! கொரோனா தடுப்பில் அசத்தும் தமிழ்நாடு

By karthikeyan VFirst Published Aug 8, 2020, 6:58 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5883 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5883 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமே, தொற்றுள்ளவர்களை அதிகமாக கண்டறிந்து விரைவில் கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் இன்று 67,553 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5883 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே உறுதியான நிலையில், இன்றும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே கண்டறியப்பட்டுள்ளது. இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,124ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துவருகிறது.

இன்று 5043 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,32,618ஆக அதிகரித்துள்ளது. இன்று 118 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 4808ஆக அதிகரித்துள்ளது. 

click me!