சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டது. ஆனால், அரசின் பல்வேறு அதிரடி நடவடிக்கையால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா விலங்குகளை தாக்கிய அரிதான சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
undefined
கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு இருந்ததால் 11 சிங்கங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன. அதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவற்றின் உடல்நிலை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்படி இருந்த போதிலும் கடந்த 3-ம் தேதி நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரானா தொற்று காரணமாக மேலும் ஒரு சிங்கம் உயிரிழந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்பநாதன் என்ற 12 வயதான சிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.