அட கடவுளே... விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா... முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி..!

Published : Apr 07, 2021, 01:35 PM IST
அட கடவுளே... விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா... முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி..!

சுருக்கம்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு பணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ‘சகாயம் அரசியல் பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். இதனைத்தொடர்ந்து  அவர் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்நிலையில் சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!