அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.. என்ன ஆச்சு தெரியுமா?

By Raghupati R  |  First Published Nov 4, 2023, 12:05 AM IST

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கார்த்தி சிதம்பரத்திற்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அவருக்கு குடலில் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் அவருக்கு வயிற்றில் துளையிட்டு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கார்த்தி சிதம்பரம் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு அட்வான்ஸ் டெக்னாலஜியில் சிறியளவில் துளையிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை என்பதால், கார்த்தி சிதம்பரம் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. எனினும் அவர் ஓரிரு வாரங்கள் ஓய்வெடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது ஆதரவாளர்கள் யாரும் அப்போலோ மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

click me!