நிறம் மாறி ஜொலித்த கடல் !! நள்ளிரவில் குவிந்த பொதுமக்கள் !! சென்னை கடல் பகுதிகளில் திடீர் மாற்றம் ..

Published : Aug 19, 2019, 11:04 AM ISTUpdated : Aug 19, 2019, 11:07 AM IST
நிறம் மாறி ஜொலித்த கடல் !! நள்ளிரவில் குவிந்த பொதுமக்கள் !! சென்னை கடல் பகுதிகளில் திடீர் மாற்றம் ..

சுருக்கம்

சென்னை பகுதிகளில்  நேற்று கடல் திடீரென நீல நிறத்தில் மாறியதால் அதை காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர் .

சென்னை திருவான்மியூர் பகுதியில் நேற்று இரவு திடீரென கடல் நீல நிறத்தில் மாறி காட்சியளித்தது . இந்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது . இதை கேள்விபட்டதும் இளைஞர்கள் , பொதுமக்கள் என நள்ளிரவு நேரத்திலும் திரண்டு வந்தனர் .

கடல் நிறம் மாறியதை ஆச்சரியத்துடன் பார்த்த அவர்கள் , அதை தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுத்து கொண்டனர் . அந்த அலைகளோடு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர் .

இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறும்போது , உலகின் பல இடங்களில் கடல் நீலம் மற்றும் மஞ்சள் நிறமாக சில நேரங்களில் மாறுவது வழக்கம் தான் . கடலில் இருக்கும் பாக்டீரியாக்களால் இந்த நிறம் மாறும் தன்மை நடைபெறும் என்றும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படாது  என்று கூறினார் .

திருவான்மியூர் மட்டுமின்றி ஈச்சம்பாக்கம் , பெசன்ட் நகர் பகுதிகளிலும் கடல் நிறம் மாறி காணப்பட்டது . இதுகுறித்து விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வந்துள்ளது ..

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!