சென்னை திரும்பவும் அப்படி ஆகப்போகுதா...! சூழ்ந்து வந்து பயமுறுத்தும் கருமேகம்...!

By Asianet TamilFirst Published Aug 18, 2019, 10:49 AM IST
Highlights

அதிகாலையில் மெல்ல வேகமெடுக்க ஆரம்பித்த மழை காலை 8 மணி முதல் 9 மணிவரை  கனமழையாக கொட்டித் தீர்த்தது, இதனால், சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்ள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவுமுதல் விட்டு விட்டு பெய்துவரும் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, காலை 8 மணிக்கு பெய்த தீடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.சென்னையில் மேலும் மழை தொடரும் என  எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், இந்நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை, மற்றும் மிக கனமழை பெய்யும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை அல்லது கன மழைக்கு பெய்யும் என்று கூறியிருந்தார். 

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தார். மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில். சென்னையில்  நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அதிகாலையில் மெல்ல வேகமெடுக்க ஆரம்பித்த மழை காலை 8 மணி முதல் 9 மணிவரை  கனமழையாக கொட்டித் தீர்த்தது, இதனால், சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்ள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. சென்னையில் பெய்துவரும்  தொடர் மழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது, மழை இப்படியே தொடர்ந்து பெய்தால் சென்னையில் இந்தாண்டு தண்ணீர் பஞ்சம் இருக்காது எனவும் கூறப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழைக்கே சாலைகளில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் மேலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விட்டுவிட்டு பெய்துவரும் மழையால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவிவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் அதே நேரத்தில்  தற்போது பெய்துவரும் மழைக்கே சென்னையில்  இந்த நிலைமை என்றால் இன்னும் கனமழை பெய்தால் என்ன நிலமையோ என்று சென்னை வாசிகள் புலம்பவும் ஆரம்பித்துள்ளனர்.
 

click me!